Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/சொர்க்கம் "இங்கேயே' இருக்கிறது

சொர்க்கம் "இங்கேயே' இருக்கிறது

சொர்க்கம் "இங்கேயே' இருக்கிறது

சொர்க்கம் "இங்கேயே' இருக்கிறது

ADDED : நவ 24, 2011 09:11 AM


Google News
Latest Tamil News
* நமக்குக் கிடைப்பதைப் பிறருக்கும் கொடுக்கப் பழக வேண்டும், பிறருக்குக் கொடுக்கவே இறைவன் நமக்கு கொடுத்திருக்கிறார்.

* இறைவனின் பெயரைச் சொல்லி, அவருடைய புகழைப் பாடுவது தான் பக்தி மார்க்கத்தில் சிறந்த செயல்.

* நமக்குள் இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை இருந்தால் தான், நம்முடைய எண்ணங்களும், செயல்களும் நல்லவிதமாக முடியும்.

* சொர்க்கத்தை தேடிப் போக வேண்டியதில்லை. கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம், பிறரிடம் காட்டும் அன்பு, உதவி இவற்றால் கிடைக்கும் மனநிறைவே சொர்க்கம்.

* நமக்கு எது வேண்டுமோ அதை இறைவனிடம் கேட்பதில் தவறில்லை. இறைவன் உங்களுடைய தகுதிக்கு ஏற்பக் கொடுத்தருள்வான்.

* 'எனக்கு எல்லாம் நீயே; உன்னையே எனக்குக் கொடு' என்று வேண்டிக் கொள்ளும் பக்தி மார்க்கம் தான் அனைத்தையும் விட சிறந்தது.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us