Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/'ஓம்' என்று சொல்வதற்கு தகுதி

'ஓம்' என்று சொல்வதற்கு தகுதி

'ஓம்' என்று சொல்வதற்கு தகுதி

'ஓம்' என்று சொல்வதற்கு தகுதி

ADDED : ஆக 28, 2008 08:42 AM


Google News
Latest Tamil News
<P>பொதுவாக மனத்தை ஒருமுகப்படுத்துதல் போன்ற சாதனைகள் ஒருநாளில் செய்யும் செயல் அல்ல. பின்னாளில் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவது என்பது தேர்வுக்குச் செல்லும் மாணவன் தேர்வுக்கு முதல்நாளோ அல்லது தேர்வு அறைக்குச் செல்லும் போதோ படிப்பது போலாகும். வாழ்வின் இறுதியில் செய்யும் முயற்சிகளால் குழப்பமும் பயமுமே மிஞ்சும். பிரணவமாகிய 'ஓம்' என்னும் மந்திரத்தைக் குறிப்பிட்டவர்கள் மட்டுமே சொல்லலாம் என்று கூறுவது சரியல்ல. இது ஒரு தவறான நம்பிக்கை. பகவத்கீதையில் கிருஷ்ணர் ஓங்காரத்தைக் குறிப்பிட்டவர்கள் மட்டுமே சொல்ல வேண்டும் என்று குறிப்பிடவில்லை. அம்மந்திரத்தை உச்சரிப்பவர்கள் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றே குறிப்பிடுகிறார். ஐம்புலன்களை அடக்க வேண்டும் என்றும், மனம் ஒருமுகப்பட வேண்டும் என்பதே கீதை காட்டும் தகுதிகளாகும். மனம் ஒருநிலைப்படாமல் அலைபாயும் போது மந்திரம் உச்சரிப்பதில் பயனில்லை.<BR>பழம் தரும் மரம் ஒன்றின் விதையை தோட்டத்தில் நட்டவுடன் பலன் கிடைப்பதில்லை. அதை முறைப்படி வளர்த்து, பாதுகாத்தால் தான் எதிர்காலத்தில் பலன் கிடைக்கும். மனதையும் படிப்படியாகவே முயற்சி செய்தால் மட்டுமே பக்குவப்படுத்த முடியும். அதனால் இளமை முதற்கொண்டே தியானம் போன்ற நல்ல விஷயங்களில் நாட்டம் செலுத்துங்கள்.</P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us