Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/முடிவு "அவன்' கையில்!

முடிவு "அவன்' கையில்!

முடிவு "அவன்' கையில்!

முடிவு "அவன்' கையில்!

ADDED : நவ 30, 2012 05:11 PM


Google News
Latest Tamil News
* அன்பை அதிகமாக வெளிப்படுத்துங்கள். குறைவாகப் பேசுங்கள். உண்மையான சேவையில் ஈடுபடுங்கள். இவை தான் தியானத்தின் அடையாளங்கள்.

* முதலில் கடவுள், அடுத்தது உலகம், கடைசியாக 'நான்' என்ற அடிப்படையில் மனிதன் வாழ வேண்டும் . ஆனால், இன்றோ முதலில் நான், அடுத்து உலகம், கடைசியாக கடவுள் என்ற வரிசையில் மனிதன் சிந்திக்கத் தொடங்கி விட்டான்.

* வாழ்வின் ஒவ்வொரு கணப்பொழுதையும் தியானத்திற்காகப் பயன்படுத்துங்கள். அன்றாடம் வீட்டைச் சுத்தம் செய்யும் போது, இதயவீட்டையும் சுத்தப்படுத்தினால் அதுவே தியானமாகி விடும்.

* மனிதனுக்கு முயற்சி அவசியம். அதேநேரம், அந்த முயற்சியின் முடிவும் வெற்றி தோல்வியும் கடவுளாலேயே நிர்ணயிக்கப்படுகிறது என்பதை மறந்து விடாதே.

* அழுக்குத் துணியை நீராலும், சோப்பாலும் வெண்மையாக்குவது போல அழுக்காக இருக்கும் மனதை பக்தி என்னும் நீராலும், நேர்மை என்னும் சோப்பாலும் பளிச்சிடச் செய்யுங்கள்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us