Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/இணைபிரியாத நண்பர்கள்

இணைபிரியாத நண்பர்கள்

இணைபிரியாத நண்பர்கள்

இணைபிரியாத நண்பர்கள்

ADDED : பிப் 28, 2013 11:02 AM


Google News
Latest Tamil News
* நம் வாழ்வை திட்டமிட்டு நாமே அமைத்து கொள்ள வேண்டும். பிறர் அபிப்ராயத்திற்காக வாழ்வது கூடாது.

* மனித இதயத்தில் ஆசை, கோபம் போன்ற பெருந்தீ எரிந்து கொண்டு இருக்கிறது. இதனை நெறிப்படுத்தாவிட்டால் மனித சமூகமே அழிந்து விடும்.

* சிறுகல்லைக் கூட கடவுள் நிலைக்கு உயர்த்த முடியும். ஆனால், கடவுளைக் கல்லாக கீழே கொண்டு வருவது கூடாது.

* நமக்குத் தேவையானதை வழங்க கடவுள் எப்போதும் தயாராக இருக்கிறார். ஆனால், அதை பெறுவதற்கு நம்மை இன்னும் தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை.

* இளமையிலேயே நா ருசியைக் கட்டுப்படுத்துவது நல்லது. இதனால், நோய்கள் அண்டாமல் ஆரோக்கியமாக வாழமுடியும்.

* துன்பத்திலும் இன்பத்தைக் காண்பவனே சிறந்தவன். அத்தகையவனைக் கடவுளுக்கு நிகராக ஒப்பிடலாம்.

* அமைதியும், ஆனந்தமும் இணைபிரியாத நண்பர்கள். தியானத்தின் மூலம் இவர்களின் நட்பைப் பெற முடியும்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us