/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/பரிதாபமாக காட்சியளிக்கும் மறைமலையடிகள் இல்லம் : தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு முன் பொலிவு பெறு�பரிதாபமாக காட்சியளிக்கும் மறைமலையடிகள் இல்லம் : தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு முன் பொலிவு பெறு�
பரிதாபமாக காட்சியளிக்கும் மறைமலையடிகள் இல்லம் : தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு முன் பொலிவு பெறு�
பரிதாபமாக காட்சியளிக்கும் மறைமலையடிகள் இல்லம் : தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு முன் பொலிவு பெறு�
பரிதாபமாக காட்சியளிக்கும் மறைமலையடிகள் இல்லம் : தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு முன் பொலிவு பெறு�
UPDATED : ஏப் 18, 2010 10:55 AM
ADDED : ஏப் 18, 2010 10:11 AM
தமிழ் மொழி மீது தீராத பற்று கொண்டுள்ள முதல்வர் கருணாநிதி தமிழ் அறிஞர்களை கவுரவிப்ப திலும், தமிழ் அறிஞர்களின் நூல் களை அரசுடமையாக்குவதிலும் எப்போதும் தனி அக்கறை கொண்டவர். இதற்கு முத்தாய்ப்பாக, உலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வரும் ஜூன் மாதம் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஒன்றை அவர் நடத்த உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடந்து வருகின்றன. மாநாட்டை முன்னிட்டு தமிழ் அறிஞர்களின் நூல்கள், அருமை, பெருமைகள், அவர்களின் நினைவிடங்களை தூசி தட்டி, மிளிர வைக்கும் பணிகளில் அரசு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் மொழிக் காக பாடுபட்ட 'பைந்தமிழ் வித்தகர்' மறைமலையடிகளாரின் இல்லம் சீர்குலைந்து காணப்படுவது இன்னும் முதல்வரின் கவனத்திற்கு செல்லவில்லை போலும். அதனால், பெருமை பெற்ற ஒரு தமிழ் வித்தகரின் இல்லம் சிதிலமடைந்து போய் உள்ளது. சென்னையை அடுத்த பல்லாவரம், சாவடி தெருவில் 40 சென்ட் பரப்பளவிலான இடத்தில் மறைமலையடிகளாரின் இல்லம் உள்ளது. அடிகளாரின் மறைவிற்கு பின் கடந்த 1962ம் ஆண்டு முன்னாள் கல்வித்துறை அமைச்சர் பக்தவத்சலம், அவர் இல்லத்தின் முகப்பில் மறைமலையடிகள் கலை மன்றத்தை திறந்து வைத்தார். தமிழ் கலாசாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள் இந்த மண்டபத்தில் நடத்தப்பட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அடிகளாரின் பேரன் தாயுமானவன், அங்கு மறைமலையடிகள் சிலையை நிறுவினார்.
திருநெல்வேலி சைவ சித்தாந்த கழகத்தின் பராமரிப்பில் உள்ள இந்த இல்லத்தில் மறைமலையடிகள் பயன்படுத்திய கேசட், மெத்தை, தலையணை, கட்டில், நாற்காலி, பூஜை பொருட்கள், சாமி சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் தற்போதும் உள்ளன. முறையாக பராமரிக்காததால், அவை பெரும்பாலும் செல்லரித்துவிட்டன. அடிகளார் மறைவிற்கு பின் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வரை, அவர் பூஜை நடத்திய அறையில் தெய்வ வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. தற்போது வாட்ச்மேன் ஒருவரை தவிர இல்லத்தை கவனித்துக் கொள்ள வேறு யாரும் அங்கு இல்லாததால், பூஜை அறை கூட இருளடிந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையில் இல்லத்தின் முகப்பில் இருந்த அடிகளாரின் சிலை அடியோடு பெயர்ந்து விழுந்தது. அதை மீண்டும் நிறுவ யாரும் முன்வரவில்லை. இல்லம் சிதிலமடைந்துள்ள நிலையில், இல்லத்தை சுற்றிலும் பாம்புகள் படையெடுக்கும் அளவிற்கு புதர் மண்டியுள்ளது. அத்திப்பூத்தாற்போல எப்போதாவது நகராட்சி சார்பில் இந்த புதர்கள் அகற்றப்படும். மாவட்ட நூலக அலுவலரின் அனுமதியோடு, இல்லத்தின் ஒரு பகுதியில் தற்போது மறைமலையடிகள் பெயரில் நூலகம் இயங்கி வருகிறது. இங்கும் போதுமான புத்தகங்கள் இல்லை. இவ்வாறு பல வழிகளில் சீரழிந்து காணப்படும் மறைமலையடிகளாரின் இல்லம், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ள இத்தருணத்திலாவது புத்துயிர் பெறுமா என்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
மாயமான அடிகளாரின் 'சமாதி': பழைய பல்லாவரம் பகுதி மக்களுக் காக மலங்கானந்தபுரத்தில் சுடுகாடு உள்ளது. கடந்த 1950ம் ஆண்டு மறைமலையடிகள் மறைந்த போது, இந்த சுடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு, சமாதி அமைக்கப்பட்டது. நாளடைவில் சுடுகாட்டையே சிலர் ஆக்கிரமித்தனர். தற்போது சுடுகாட்டின் பெரும்பாலான பகுதிகள் வீடுகளாக மாறிவிட்ட நிலையில், எஞ்சிய பகுதி புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அடிகளாரின் சமாதி எங்கே இருக் கிறது என்பதை கூட கண்டறிய முடியாத நிலை உள்ளது. குறிப்பிட்ட சுடுகாட்டு இடத் திற்கு வருவாய்த் துறை பட்டா வழங்கிவிட்டதாகவும் புலம்புகின்றனர் உள்ளூர்வாசிகள்.