/உள்ளூர் செய்திகள்/சென்னை/இளைஞர் காங்., தேர்தல் முடிவுகள் அறிவிப்பு தோல்வியடைந்தவர்கள் நாற்காலி வீசி ரகளைஇளைஞர் காங்., தேர்தல் முடிவுகள் அறிவிப்பு தோல்வியடைந்தவர்கள் நாற்காலி வீசி ரகளை
இளைஞர் காங்., தேர்தல் முடிவுகள் அறிவிப்பு தோல்வியடைந்தவர்கள் நாற்காலி வீசி ரகளை
இளைஞர் காங்., தேர்தல் முடிவுகள் அறிவிப்பு தோல்வியடைந்தவர்கள் நாற்காலி வீசி ரகளை
இளைஞர் காங்., தேர்தல் முடிவுகள் அறிவிப்பு தோல்வியடைந்தவர்கள் நாற்காலி வீசி ரகளை

சென்னை:மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் அடங்கிய சட்டசபை தொகுதிகளின் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் ஓட்டுப் பதிவு எண்ணிக்கை நேற்று மாலை வெளியானது.
அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், துறைமுகம், வில்லிவாக்கம், எழும்பூர் ஆகிய ஐந்து சட்டசபை தொகுதிகளின் தலைவர் உள்ளிட்ட 10 நிர்வாகிகள் மற்றும் 10 பிரிதிநிதிகளின் தேர்தல் நேற்று நடந்தது.காலை 8 மணிக்கு துவங்கிய தேர்தல் மாலை 5 மணி வரை நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர் வாசன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் செல்லக்குமார், ஜே.எம்.ஆரூண் எம்.பி., ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல கோஷ்டித் தலைவர்களின் ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
தேர்தலில் வாக்களிக்க வந்த இளைஞர்களின் வாகனங்களை, சத்தியமூர்த்தி பவனில் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், சத்தியமூர்த்தி பவன் கட்டடத்தின் வெளியே உள்ள ஜெனரல் பீட்டர்ஸ் சாலையில் வாகனங்களை நிறுத்தினர். அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதிக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர் ரஞ்சன்குமார், வாசன் ஆதரவாளர் தியாகு, செல்லக்குமார் ஆதரவாளர் கோபிநாத் ஆகியோர் போட்டியிட்டனர்.
துறைமுகம் தொகுதிக்கு வாசன் ஆதரவாளர் யோகானந்த், சேப்பாக்கம் தொகுதிக்கு ஜே.எம்.ஆரூண் ஆதரவாளர் ரயான்பஷீர், சாம்பிரசாத், அண்ணாநகர் தொகுதியின் பிரிதிநிதி பதவிக்கு வாசன் ஆதரவாளர் ஜி.ஆர்.கதிரவன், செல்லக்குமார் ஆதரவாளர் அனுராதா, எழும்பூர் தொகுதியின் பிரிதிநிதி பதவிக்கு வாசன் ஆதரவாளர் தாஸ்பாண்டியன் உட்பட ஏராளமானோர் போட்டியிட்டனர்.மாலை 5 மணிக்கு மேல் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.
சேப்பாக்கம் தொகுதியின் தலைவராக ரயான்பஷீர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனால் மறு தேர்தல் நடத்த வேண்டும் என, தோல்வி அடைந்தவரின் ஆதரவாளர்கள் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டனர்."மறுதேர்தல் நடத்த முடியாது' என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து விட்டதால் ஆத்திரம் அடைந்த இளைஞர் காங்கிரசார் திடீரென்று நாற்காலிகளை தூக்கி சத்தியமூர்த்தி பவன் வெளியே வீசினர். சிலர் உருட்டுக் கட்டை மற்றும் கம்புகளுடன் உள்ளே நுழைந்து கடும் ரகளையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து, ரகளையில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசாரை வெளியேற்றினர். போலீசாருக்கும், இளைஞர் காங்கிரசாருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.ஓட்டு எண்ணிக்கை முடிவில், துறைமுகம் தொகுதியின் தலைவராக வாசன் ஆதரவாளர்கள் யோகானந்த், வில்லிவாக்கம் தொகுதியின் தலைவராக மனோகர், சேப்பாக்கம் தொகுதியின் தலைவராக ரயான் பஷீர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஆயிரம் விளக்கு தொகுதி தலைவராக கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர் செல்வம், அண்ணாநகர் தொகுதி தலைவராக செல்லக்குமார் ஆதரவாளர் அனுராதா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.