Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/முன்னேறிக் கொண்டே இரு!

முன்னேறிக் கொண்டே இரு!

முன்னேறிக் கொண்டே இரு!

முன்னேறிக் கொண்டே இரு!

ADDED : டிச 11, 2013 01:12 PM


Google News
Latest Tamil News
* பெருமைக்காக செய்யும் செயல் எத்தனை உயர்வானதாக இருந்தாலும், அது கடவுளுக்கு விருப்பமானது அல்ல.

* செய்யும் செயலை செவ்வனே முடிக்க உள்ளத்தில் துணிவு வேண்டும். ஒருபோதும் ஆத்திரப்படாதே.

* பயணமோ மிக நீண்டது. எவ்வளவு தூரம் என்பதை கணக்கிட முடியாது. முன்னேறிக் கொண்டேயிரு.

* தெய்வத்திடம் செய்யும் முறையீடு ஒருபோதும் வீண்போகாது. விடாது முயன்றால் வெற்றி பெறுவது உறுதி.

* விருப்பத்திற்கு மாறாக நடந்தால் மனம் உடைந்து விடாதே. சஞ்சலம் சிறிதும் வேண்டாம். எப்போதும் அமைதியாக இருக்கப் பழகிக் கொள்.

* உடல் பஞ்ச பூதத்தால் ஆனது. பஞ்சபூதங்களுக்கு அழிவு கிடையாது என்பதை உணர்ந்து கொள்.

* படிப்பதை விட்டு விடாதே. நல்ல நூல்களைப் படி.

* சகிப்புத்திறன் இல்லாவிட்டால் உலகில் எதையும் சாதிக்க முடியாது.

- ஸ்ரீஅன்னை




      Our Apps Available On




      Dinamalar

      Follow us