Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வள்ளலார்/படிகளைக்கண்டு மலைக்காதீர்கள்

படிகளைக்கண்டு மலைக்காதீர்கள்

படிகளைக்கண்டு மலைக்காதீர்கள்

படிகளைக்கண்டு மலைக்காதீர்கள்

ADDED : செப் 18, 2008 09:11 AM


Google News
Latest Tamil News
<P>கருணை நிறைந்தவராய் இருங்கள். உங்கள்மனதில் இரக்கம் ஊற்றுப் போல பொங்கி வழியட்டும். அடுத்தவர் துன்பங்களைப் போக்க உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். <BR>வயிற்றுப் பசிக்காக மற்ற உயிர்களைக் கொன்று உண்பது கூடாது. உயிர்க்கொலை புரிவோர் எமக்கு எந்நாளும் உறவாக மாட்டார்கள். இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. ஆனால், கருத்துக்கு எட்டுவான். அன்போடு அவனை பற்றிப் பிடியுங்கள். நம்மை விட்டு விலகவே மாட்டான். அன்பு எங்கிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான். பலகாலம் இறைவனை வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மைகளை எல்லாம் தர்மம் செய்து ஒரேநாளில் பெற முடியும். தர்மத்தின் பயனை உணர்ந்து கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தர்மம் செய்வார்கள். எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளையும் படிப்படியாக கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தைப் போல ஆண்டவன் இருக்கிறான். மனந்தளராமல் கடவுளைக் காணும் முயற்சியை மேற்கொள்ளுங்கள். புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டால் என் மனம் நடுங்குகிறது. அருட்பெருஞ்சோதியை உள்ளும் புறமும் காண்பவர்கள் மன்னுயிரைத் தன் உயிர்போல் மதித்து நடப்பார்கள். </P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us