Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வள்ளலார்/எண்ணங்களை கடவுளிடம் சொல்லுங்க!

எண்ணங்களை கடவுளிடம் சொல்லுங்க!

எண்ணங்களை கடவுளிடம் சொல்லுங்க!

எண்ணங்களை கடவுளிடம் சொல்லுங்க!

ADDED : அக் 09, 2008 09:47 AM


Google News
Latest Tamil News
<P>சிலருக்கு தூங்குவதில் சுகம். உணவை ருசித்து உண்டு மகிழ்வது சிலருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் சிலர் பொழுதை விளையாடிக் கழிக்கிறார்கள். நாடகம், கூத்து இவற்றில் இன்பம் காண்பவர்களும் உண்டு. ஆனால், என்றும் அழியாத இன்பம் ஆண்டவனே என்பதை மக்கள் உணர மறுக்கிறார்கள். அழுத பிள்ளைக்கு பால் கிடைக்கும். எதையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தால் அதற்கு பசிக்கிறது என்பதை தாய் அறியமாட்டாள். அதனால் உங்கள் எண்ணங்களை இறைவனிடம் சொல்லுங்கள். அவன் பரிசீலனை செய்து விரைவில் பலன் கொடுப்பான். <BR>புலால் உண்பவன் வயிற்றில் இறந்து போன உயிர்களின் உடல்கள் புதைக்கப்படுகின்றன. அசைவ உணவு உண்பவன் வாழ்வில் ஆன்மிக வளர்ச்சி துளியளவும் ஏற்படாது. பசியுடன் இருக்கும் ஜீவனுக்கு ஆன்மிகம் புரியாது. அந்த மனிதனுக்கு உணவு அளித்து பசித்தீயை போக்குங்கள். அந்த ஜீவகாருண்ய உணர்வே மிக உயர்வானது. </P>

<P>தன்னுயிர் போல மன்னுயிரை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவ்வுயிர்களுக்கு துன்பம் இழைக்காதீர்கள். பிறருக்கு உண்டாகும் ஆபத்துக்களை அகற்றி, அச்சம் போக்க வேண்டியது அருள்வாழ்வின் அடிப்படை.</P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us