Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வள்ளலார்/பதட்டம் கூடவே கூடாது

பதட்டம் கூடவே கூடாது

பதட்டம் கூடவே கூடாது

பதட்டம் கூடவே கூடாது

ADDED : செப் 21, 2010 06:09 PM


Google News
Latest Tamil News
* சூரிய உதயத்துக்கு முன்னால் விழிப்பது சிறந்த பழக்கம். அதிகாலையில் கடவுளைத் தியானம் செய்தல் அவசியம். பின்னர் காலைக்கடன்களை முழுமையாக செய்தல் வேண்டும். இளம் வெயிலில் மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

* இளம்வெந்நீரில் அழுக்கு தீர தேய்த்துச் சுத்தமாக குளித்தல் வேண்டும். காலை வெயில் உடல்மேல் படாதவண்ணம் மேற்சட்டை அணிதல் வேண்டும்.

* குளித்தபின் கடவுளை சிறிதுநேரம் வணங்க வேண்டும். பசி எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். வேகவேகமாகவோ அல்லது சோம்பேறித்தனத்துடன் மிக நிதானமாகவோ சாப்பிடக்கூடாது. சாப்பிட்டு முடிந்தவுடன் வெந்நீர் அருந்த வேண்டும்.

* கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் இவற்றை கனவிலும் நினைக்கக் கூடாது. புகை, கள் போன்ற தீய பழக்கங்களையும் அறவே தவிர்க்கவேண்டும். பதட்டத்தோடு எச்செயலையும்

அணுகுதல் கூடாது. இவற்றை விலக்காவிட்டால் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியாது.

* நல்லோர் மனதை நடுங்க செய்யும் காரியத்தை கைவிடுங்கள். நம்பியவர்களை நட்டாற்றில் கை கழுவி விடாதீர்கள். ஆசை காட்டி, யாரையும் மோசம் செய்யாதீர்கள். யாரையும் அவமதிக்கும் எண்ணத்தை கைவிடுங்கள்.

- வள்ளலார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us