/உள்ளூர் செய்திகள்/மதுரை/விரிவுரையாளரிடம் நகை பறிப்பு:ஹெல்மெட் அணிந்தவர் துணிகரம்விரிவுரையாளரிடம் நகை பறிப்பு:ஹெல்மெட் அணிந்தவர் துணிகரம்
விரிவுரையாளரிடம் நகை பறிப்பு:ஹெல்மெட் அணிந்தவர் துணிகரம்
விரிவுரையாளரிடம் நகை பறிப்பு:ஹெல்மெட் அணிந்தவர் துணிகரம்
விரிவுரையாளரிடம் நகை பறிப்பு:ஹெல்மெட் அணிந்தவர் துணிகரம்
ADDED : மே 30, 2010 01:36 AM
திருமங்கலம்:திருமங்கலத்தில் நடந்து சென்ற கல்லூரி பெண் விரிவுரையாளரிடம், பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் 15 பவுன் நகையை பறித்து சென்றனர்.
சென்னை ஜெயின் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்து வருபவர் சிவசங்கரி (38). இவர் திருமங்கலம் முன்சீப் கோர்ட் ரோட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். நேற்று காலை அங்கிருந்து செங்குளத்தில் உள்ள மற்றொரு உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றார்.
நுகர்பொருள் வாணிபக் கிட்டங்கி அருகே செல்லும் போது பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இருவர் சிவசங்கரி மீது மோதுவது போல் வந்துள்ளனர். இதில் நிலை தடுமாறிய சிவசங்கரி கழுத்தில் அணிந்திருந்த தாலி உட்பட 15 பவுன் நகைகளை பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த நபர் பறித்துள்ளார். திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.