ADDED : ஜூன் 03, 2010 12:28 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் குடைபாறைப்பட்டி அருகே எம்.
ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் கார்த்தி(13). மே 31ல் காணாமல் போன இவர், நேற்று முன்தினம் பெரியபள்ளபட்டி நாகமுத்துகுளம் அருகே கிணற்றில் பிணமாக கிடந்தார். இவரது உடலைக் கைப்பற்றிய திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார், பரிசோதனைக்காக திண் டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.