Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/உன்னை மறைத்துக் கொள்

உன்னை மறைத்துக் கொள்

உன்னை மறைத்துக் கொள்

உன்னை மறைத்துக் கொள்

ADDED : மார் 15, 2012 08:03 AM


Google News
Latest Tamil News
* மனிதனிடம் உள்ள சுயநலத்தை வெளியேற்றினால், மறுபக்கம் வழியாக இறைவன் நுழைகிறான். சுயநலம் அகன்றுவிட்டால் இறைவன் மட்டுமே இதயத்தில் இருப்பான்.

* விக்கிரகத்தை கடவுள் என்று கூறலாம். கடவுளையே விக்கிரகமாக நினைக்கும் தவறைத் தவிர்க்க வேண்டும்.

* நாமே நமக்கு சொர்க்கத்தை உருவாக்கிக் கொள்கிறோம். நரகத்தில் கூட சொர்க்கத்தை உருவாக்க நம்மால் முடியும்.

* நாம் அன்பிற்காகக் கடவுளை அன்பு செய்ய வேண்டும். கடமைக்காகக் கடமை செய்ய வேண்டும்.

* நம்மிடமுள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி, பிறர் தங்கள் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கு உதவி செய்வது தான்.

* இறைவன் தன்னை நன்றாக மறைத்துக் கொண்டு, மகத்தான செயல்களில் ஈடுபடுகிறான். அதேபோல் ஒருவன் தன்னை மறைத்துக் கொண்டு (தன் செயல்பாடுகளைப் பற்றி பெருமையடிக்காமல்) செயல்பட்டால் உலகில் சாதிக்க முடியும்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us