Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/பற்றில்லாமல் வாழுங்கள்

பற்றில்லாமல் வாழுங்கள்

பற்றில்லாமல் வாழுங்கள்

பற்றில்லாமல் வாழுங்கள்

ADDED : நவ 16, 2012 10:11 AM


Google News
Latest Tamil News
* நாம் பெரிய மனிதர்கள் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒருநாள் அனைவரும் உலகத்தை விட்டே செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். அப்போது மக்கள் நம்மை மறந்து விட்டு, அவரவர் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பர்.

* கடவுள் என்றும் நிரந்தரமானவர். அவருக்குப் பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. எல்லா ஆற்றலும் அவருடையதே. எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவரின் அதிகாரத்தின் கீழே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

* கடவுளின் கட்டளைப்படியே இயற்கை இயங்குகிறது. எல்லாம் வல்ல கடவுளை நம்மால் வழிபட மட்டுமே முடியும். செயல்களின் பலனை அவரிடம் ஒப்படைத்துவிட்டு பற்றில்லாமல் கடமையில் ஈடுபடுங்கள்.

* மக்கள் வணங்கும் எல்லா வடிவங்களிலும் ஒரே கடவுளே வீற்றிருக்கிறார். இதை உணர்ந்து கொண்டால் நம்முள் வேற்றுமை மறைந்துவிடும்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us