Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/மனிதனும் தெய்வ வடிவமே!

மனிதனும் தெய்வ வடிவமே!

மனிதனும் தெய்வ வடிவமே!

மனிதனும் தெய்வ வடிவமே!

ADDED : ஆக 24, 2011 09:08 AM


Google News
Latest Tamil News
* கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடிகொண்டிருக்கிறார், இதைத்தவிர தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை, இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான் புரிந்து கொண்டிருக்கின்றேன். மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான்.

* பிறருக்கு செய்ய வேண்டிய கடமை, உதவி புரிவதும், உலகிற்கு நன்மை செய்வதுமாகும். உலகிற்கு நன்மை செய்வதனால், உண்மையில் நமக்கு நாமே உதவி செய்து கொள்கிறோம். தீமையைச் செய்வதனால் நாம் நமக்கும் பிறருக்கும் தீமை செய்கிறோம்.

* சிம்மாசனத்தில் வீற்றிருந்து தங்கத்தாலான அரண்மனையில் வாழ்ந்த போதும் அறவே சுயநலம் இல்லாதவனாக இருந்தால், அவன் கடவுளிடமே இருக்கிறான் என்று பொருளாகும். சுயநலமற்ற தன்மையே கடவுள்.

* அலைகள் சிறிதாக இருந்தாலும் அவை கடலினின்றும் வேறுபட்டவை அல்ல, கடலின் ஒரு பகுதி ஆகும். அது போல நாமும் மனிதர்களாயினும் தெய்வ சொரூபங்களே.

- விவேகானந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us