/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சிவகாசியில் ஆமைவேக பணியால் "3ஜி' சேவை துவக்குவதில் தாமதம்சிவகாசியில் ஆமைவேக பணியால் "3ஜி' சேவை துவக்குவதில் தாமதம்
சிவகாசியில் ஆமைவேக பணியால் "3ஜி' சேவை துவக்குவதில் தாமதம்
சிவகாசியில் ஆமைவேக பணியால் "3ஜி' சேவை துவக்குவதில் தாமதம்
சிவகாசியில் ஆமைவேக பணியால் "3ஜி' சேவை துவக்குவதில் தாமதம்
சிவகாசி : சிவகாசியில் ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதால் "3ஜி' சேவை துவக்கு வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
மார்ச் அல்லது ஏப்ரலில் இச்சேவை சிவகாசியில் அறிமுகம் செய்யப்படும் என பி.எஸ்.என்.எல்., அறிவித்திருந்தது.
சில வாரங்களுக்கு முன் "3ஜி' சேவைக்கான இயந்திரங்கள் வெளிமாநிலத்தில் இருந்து லாரியில் சிவகாசிக்கு வந்தன. இங்குள்ள லோடுமேன்கள் லாரியில் இருந்து பொருட்களை இறக்கி வைக்க, 23,000 ரூபாய் கூலி வழங்கினால்தான் இறக்க முடியும். வேறுநபர்களை வைத்து இறக்க அனுமதிக்க முடியாது என பிரச்னை செய்தனர். லோடுமேன்களுக்கும், லாரி டிரைவர், கிளீனருடன் அடிதடி தகராறு ஏற்பட்டு லாரியில் இருந்து லோடு இறக்காமலே திருப்பி கொண்டு சென்றுவிட்டனர்.
இதுபோன்ற பிரச்னைகளால் சிவகாசிக்கு இச் சேவை துவக்குவதில் மேலும் தாமதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. "3ஜி' சேவை கோரி இதுரை 300க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஆனால் பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தால் எப்போது இச்சேவை வழங்குவோம் என கூற முடியவில்லை. எப்போது கேட்டாலும் இன்னும் சில நாட்களில் கிடைக்கும் எனக் கூறி நாட்களை கடத்தி வருகின்றனர். ஆனால் விருதுநகரில் இச்சேவை ஏப்ரலில் துவக்கப்பட்டு நன்கு செயல்பட்டு வருகிறது. எனவே, சிவகாசியில் இச் சேவையை விரைவில் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.