ADDED : ஜூன் 07, 2024 11:04 AM
மரங்கள் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை கூட செய்ய முடியாது, ஏனென்றால் அவை இல்லாவிட்டால் நம் இயக்கமே நின்று விடும். உயிர்களை எல்லாம் வாழ வைக்கும் உயிரினம் தாவரம். மாசு நிறைந்த காற்றைச் சுத்தப்படுத்தவும், உண்பதற்கு உணவு, ஒதுங்க நிழல், உடலுக்கு மருந்து, உணர்வுக்கு விருந்து என அனைத்துமாக அது பயன்படுகிறது. ஆனால் சிலர் வீணாக மரங்களை வெட்டுவதால் பூமியே பாழாகிறது. இது கண்டிக்கத்தக்க செயல். மரத்தை வெட்டுவோர் அதற்கு ஈடாக புதிதாக மரக்கன்றுகளை நடுவது அவசியம்.
* ஒரு மரத்தின் மூலம் யார் நன்மை பெற்றாலும் அதன் பலன் மரத்தை நட்டு வளர்த்தவரை வந்து சேரும்.
* மரங்களை நடுவது சதக்கத்துல் ஜாரியா (தொடர்ந்து நடக்கும் தொண்டு) ஆகும். அதாவது எத்தனை ஆண்டு காலம் மரத்தால் பயனடைகிறோமோ அத்தனை காலத்திற்கு வெகுமதி கிடைக்கும்.