தெலுங்கிலும் யூத் படத்திற்கு வரவேற்பு
ADDED : 22 days ago
கென் கருணாஸ் இயக்கி நடித்து கடந்த மார்ச் 19ம் தேதி திரைக்கு வந்த படம் யூத். அவருடன் சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி, அனீஸ்மா அனில்குமார் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் திரைக்கு வந்து உலக அளவில் 50 கோடி வசூலித்துள்ள நிலையில், இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. மேலும். தமிழைப் போலவே தெலுங்கிலும் இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்கில் வெளியான இந்த யூத் படம் 4 நாட்களில் 3.73 கோடி வசூலித்திருக்கிறது. டப்பிங் படம் என்கிற வரிசையில் இது ஒரு நியாயமான நல்ல வசூலாகும்.