உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துரந்தர் -2 படத்தை அடுத்து ஷோம்பி திரில்லர் கதையில் நடிக்கும் ரன்வீர் சிங்!

துரந்தர் -2 படத்தை அடுத்து ஷோம்பி திரில்லர் கதையில் நடிக்கும் ரன்வீர் சிங்!


ஹிந்தியில் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர்' படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட் அடித்துள்ள நிலையில், அடுத்தபடியாக ஹன்சல் மேத்தா என்பவர் இயக்கும் 'பிரலே' என்ற ஷோம்பி திரில்லர் படத்தில் நடிக்கிறார். ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இந்த படம் இந்தியாவில் இதற்கு முன்பு முயற்சிக்கப்படாத ஒரு மாறுபட்ட படம் என்றும் கூறப்படுகிறது. அதோடு, இந்த படத்தை 300 கோடி பட்ஜெட்டில் ரன்வீர் சிங்கே தயாரிக்கிறார்.

இப்படம் குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''பிரலே ஒரு அசல் படமாகும். போர்ச்சுகீசிய நாவலான பிளைண்ட்னஸை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக இருப்பதாக வெளியாகும் செய்தி உண்மை இல்லை'' என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.மேலும், பேரழிவுகளால் சிதைக்கப்பட்ட ஒரு அவல நிலை நகரத்தை உருவாக்கும் ஷோம்பி திரில்லர் கதையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !