4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் படங்கள் ரூ.100 கோடி வசூலை தாண்டியது. இந்தியாவிலேயே எந்த ஹீரோவும் இப்படி வரிசையாக 100 கோடி படத்தை கொடுத்தது இல்லை என்று பிரதீப்புக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்த எல்ஐகே படம் இதுவரை 50 கோடி வரை வசூலை கொடுத்துள்ளது. கண்டிப்பாக, 100 கோடி வசூலிக்கும் என படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் பேசி வருகிறார்.
இது நடக்குமா என விசாரித்தால், முதலில் இருந்த வசூல் சில நாட்களாக குறைந்து வருகிறது. கோடை விடுமுறை என்றாலும் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் இருப்பதால் இன்னும் 50 கோடியை வசூலிப்பது கடினம். ஒருவேளை பிரதீப் ரங்கநாதனுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் படம் பிக்அப் ஆகி, இந்த மாத கடைசியில் 100 கோடி வசூலை எட்டும்.
எப்படியாவது இந்த படத்தை 100 கோடி பட்டியலில் இணைக்க வேண்டும் என்று அவர் தரப்பு முயற்சிக்கிறது. ஆகவே, அதற்கான முயற்சியில் அவர்கள் தீவிரமாக இறங்குவார்கள். அடுத்து வரும் தனுஷின் கர, விஜய் ஆண்டனியின் நுாறுசாமி படங்களின் வெற்றியை பொறுத்தும் எல்ஐகே வசூல் ஏறும் அல்லது இறங்கும் என்கிறார்கள் கோலிவுட்டில்.