உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 100 மில்லியன் கடந்த சாய் அபயங்கரின் 'பவழ மல்லி'

100 மில்லியன் கடந்த சாய் அபயங்கரின் 'பவழ மல்லி'

தமிழ் சினிமா உலகில் இளம் இசைப்புயலாய் நுழைந்துள்ளவர் சாய் அபயங்கர். சினிமாவுக்கு இசையமைப்பதற்கு முன்பே தனி ஆல்பம் இசையமைத்து ரசிகர்களைக் கவர்ந்தவர்.

2024ல் அவரது இசையில் வெளியான 'கட்சி சேரா' ஆல்பம் பாடல் தற்போது வரையில் யு டியுப் தளத்தில் 261 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மற்றொரு பாடலான 'ஆச கூட' 384 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அவரது இசையில் வெளிவந்த 'டியூட்' படப் பாடலான 'ஊறும் பிளட்' பாடல் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து வரவேற்பைப் பெற்றுள்ளது.

இளம் ரசிகர்களின் வரவேற்பை அதிகம் பெற்றுள்ள இசையமைப்பாளராக இருக்கும் சாய் அபயங்கரின் சமீபத்திய ஆல்பம் பாடல் 'பவழ மல்லி'.

சாய் அபயங்கர் இசையமைத்து ஸ்ருதிஹாசனுடன் இணைந்து பாடிய 'பவழ மல்லி' பாடல் கடந்த மாதம் வெளியானது. அப்பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இப்பாடலில் சாய் அபயங்கர், கயாடு லோஹர் இணைந்து நடனமாடி இருந்தனர்.

சாய் அபயங்கரின் தனி ஆல்படம் பாடல்களுக்கு இப்படியான வரவேற்பை கிடைத்திருப்பது தனியிசை உலகத்தில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !