உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சல்மான் கான், நயன்தாரா நடிக்கும் புதிய படம் ஆரம்பம்

சல்மான் கான், நயன்தாரா நடிக்கும் புதிய படம் ஆரம்பம்

தமிழில் விஜய் நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்த தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் ஹிந்திப் படத் தயாரிப்பில் அடியெடுத்து வைத்துள்ளது. பல வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள இந்த நிறுவனம் ஹிந்தியில் சல்மான் கான், நயன்தாரா நடிக்க உள்ள புதிய படத்தைத் தயாரிக்கிறது. அவர்களது தயாரிப்பில் உருவாகும் 63வது படம் இது.

தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படத்தின் பூஜை இன்று மும்பையில் நடைபெற்றது. தயாரிப்பாளர்கள், இயக்குனர், நாயகன், நாயகி என படக்குழுவினர் இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.

இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக நயன்தாரா தனது மகன்களுடன் மும்பை சென்றிருந்தார். ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படத்திற்குப் பிறகு நயன்தாரா அடுத்து நடிக்க உள்ள ஹிந்திப் படம் இது.

தென்னிந்திய இயக்குனர்களுடன் அடிக்கடி இணையும் சல்மான் கான் இந்த முறை தெலுங்கு தயாரிப்பாளர், தென்னிந்திய பிரபல நடிகை என முழு தென்னிந்திய குழுவுடன் இணைகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !