உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய விக்ரம் பிரபு பட நடிகைக்கு ஒரு வருடம் கழித்து ஜாமீன்

தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய விக்ரம் பிரபு பட நடிகைக்கு ஒரு வருடம் கழித்து ஜாமீன்

தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வாகா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் கன்னட நடிகை ரன்யா ராவ். கடந்த வருடம் மார்ச் மூன்றாம் தேதி இவர் துபாயில் இருந்து விமானம் மூலம் தங்க கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கர்நாடக டிஜிபி ஆன ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகளான இவர் பல முறை விமான பயணம் மேற்கொண்டு கிட்டத்தட்ட 102 கோடி மதிப்புள்ள தங்கத்தை துபாயில் இருந்து கடத்தி வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவர் ஜாமீனுக்கு விண்ணப்பித்து அது கிடைக்கும் வாய்ப்பு இருந்த நிலையில் தான் இவர் மீது காபிபோசா சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடம் காலம் கடந்த நிலையில் தற்போது ரன்யா ராவுக்கு காபிபோசா சட்ட விதிகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டு சிறையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !