அண்ணனுக்கு வழிவிடும் தம்பி
பி.எஸ்.மித்ரன், கார்த்தி கூட்டணியில் சர்தார் 1 படத்தின் வெற்றிக்குப் பிறகு சர்தார் 2 படத்தில் நடித்துள்ளார் கார்த்தி. இப்படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் , ரஜிஷா விஜயன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. முதலில் சர்தார் 2 படத்தை மே மாதத்தில் ரிலீஸூக்கு திட்டமிட்டனர். ஆனால், மே மாதத்தில் ஜனநாயகன், கருப்பு போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வருவதால் ஜூன் மாதத்தில் சர்தார் 2 படத்தை திட்டமிட்டால் அங்கு டாக்சிக் , பெத்தி போன்ற பான் இந்திய படங்கள் வருவதால் ஜூலை மாதத்தில் தற்போது சர்தார் 2 படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். ஆனால், ஜூலை 23ம் தேதியன்று சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரைக்கு வருவதால் சர்தார் 2 படத்தை ஜூலை முதல் வாரத்தில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .