உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கோதா' படத்தின் இன்ஸ்பிரேஷனா ராம்சரணின் 'பெத்தி' ?

'கோதா' படத்தின் இன்ஸ்பிரேஷனா ராம்சரணின் 'பெத்தி' ?


தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பெத்தி'. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சிவராஜ்குமார், பொம்மன் இரானி உள்ளிட்ட மற்ற மொழி பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் மல்யுத்தத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது என்றும் கிரிக்கெட் விளையாட்டும் இந்த படத்தில் இடம்பெறுகிறது என்பதும் சமீபத்தில் வெளியாகியுள்ள டிரைலரை பார்க்கும்போது தெரிகிறது.

இதில் ராம்சரண் கிரிக்கெட் வீரராகவும் தெரிகிறார். மல்யுத்த வீரராகவும் காட்சியளிக்கிறார். நிஜத்தில் அவர் யார் என்பது படம் பார்த்தால் தான் தெரியும். அதே சமயம் மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் பசில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் 'கோதா' என்கிற திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் டொவினோ தாமஸ் உள்ளூரில் தீவிரமான கிரிக்கெட் விளையாட்டு வீரராக இருப்பார்.

ஆனால் பாரம்பரிய மல்யுத்த வீரரான அவரது தந்தை அவருக்கு கிரிக்கெட் விளையாட தடை விதித்து மல்யுத்தத்தின் பக்கம் அவரை திசை திருப்பி அதில் சாதனை செய்ய வைப்பார் என்பதாக கதை உருவாக்கப்பட்டிருந்தது. பெத்தி படத்தின் டிரைலரை பார்க்கும்போது கோதா படத்தின் சில காட்சிகளை பார்ப்பது போலவே இருக்கிறது. இதிலிருந்து மாறுபட்டு எப்படி திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் என்பது படம் வெளியான பிறகுதான் தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !