சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு' வெற்றி
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்த ‛கருப்பு' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் தெலுங்கு மற்றும் உலக அளவில் சேர்த்து இந்த வாரத்தில் 200 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரிசையாக தோல்வி படம் கொடுத்த சூர்யாவுக்கு இந்த வெற்றி நிம்மதியை தந்துள்ளது. வசூல் அதிகரித்து இருப்பதால் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்.
அதேபோல் த்ரிஷாவும் மகிழ்ச்சியில் இருக்கிறார். பட புரமோசன் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொள்ளவில்லை. மதுரையில் நடந்த பாடல் வெளியிட்டு விழாவில் திரிஷா கலந்து கொள்ளவில்லை. அதேபோல் த்ரிஷா கலந்து கொண்ட கருப்பு முதல் காட்சியில் சூர்யா கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் கருப்பு நன்றி அறிவிப்பு விழாவில் இருவரும் இணைந்து கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் 200 கோடிக்கு மேல் வந்தால் இயக்குனர் ஆர்.ஜே பாலாஜிக்கு கார் அல்லது விலை உயர்ந்த பரிசு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.