உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!

மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!


தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து திரைக்கு வந்துள்ள 'கருப்பு' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் இதுவரை இந்திய அளவில் 100 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து தெலுங்கில் 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' என்ற படத்தில் நடித்திருக்கும் சூர்யா, அடுத்து ஜீத்து மாதவன் இயக்கும் தனது 47வது படத்தில் நடிப்பவர், அதையடுத்து ஏற்கனவே தன்னை வைத்து கடந்த 2021ம் ஆண்டில் 'ஜெய்பீம்' என்ற படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார்.

பழங்குடியின மக்களுக்காக நீதி கேட்கும் கதையில் ஜெய்பீம் படம் உருவான நிலையில், இந்த புதிய படம், திருவேங்கடம் வீரராகவன் என்ற மருத்துவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகிறது. மக்களுக்கு சேவை செய்வதிலேயே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன், பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே வாங்கி வந்தவர். பின்னர் ஐந்து ரூபாய்க்கு சிகிச்சை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !