உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 400 கோடியை கடந்த பெத்தி : இன்று முதல் புதிதாக 6 நிமிடக் காட்சிகள்

400 கோடியை கடந்த பெத்தி : இன்று முதல் புதிதாக 6 நிமிடக் காட்சிகள்

புச்சிபாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், ராம்சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் ஜுன் 4ம் தேதி வெளியான தெலுங்குப் படம் 'பெத்தி'.

இப்படம் தற்போது 400 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் இரண்டு வாரங்களைக் கடந்துள்ள நிலையில் 5 நிமிடம் 56 வினாடிகளுக்குப் புதிய காட்சிகளுடன் படம் இன்று முதல் திரையிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள்.

ஜான்வி கபூர் மற்றும் ஜெகபதி பாபு சம்பந்தப்பட்ட காட்சிகளாக அவை இருக்கும் எனத் தெரிகிறது. படம் வெளியான பின்பு ஜான்வியை கிளாமராக மட்டுமே காட்டிய விதம் கடும் விமர்சனத்தை எழுப்பியது. அதற்கு படத்தின் இயக்குனரும் வருத்தம் தெரிவித்திருந்தார். அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் ஜான்வியின் முக்கியமான காட்சி படத்தில் இன்று இடம் பெறும் என்கிறார்கள்.

400 கோடி வசூலைக் கடந்தாலும் படம் இன்னும் லாபத்தைத் தொடவில்லை என்றும் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !