உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அப்பா படத்தைத் தாமதமாகப் பாராட்டிய தனுஷ்

அப்பா படத்தைத் தாமதமாகப் பாராட்டிய தனுஷ்

மீரா கதிரவன் இயக்கத்தில், கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'ஹபீபி'. இப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது. ஆனால், வசூல் ரீதியாக சுமாரான அளவில் இருந்தது. இப்படத்தில் கஸ்தூரி ராஜா முதன்மையான கதாபாத்திரத்தில் படம் முழுவதும் நடித்திருந்தார். அவரது இயல்பான நடிப்புக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தைக் கொஞ்சம் தாமதமாகப் பார்த்துள்ள கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ் பாராட்டிப் பதிவு செய்துள்ளார்.

“தொடர்ச்சியான படப்பிடிப்பு காரணமாக ஹபீபி திரைப்படத்தை தாமதமாகத்தான் இன்று தான் பார்த்தேன். தான் அறிந்திடாத முற்றிலும் புதிய உலகத்திற்குள் நுழைந்து யூசுப்கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அப்பாவிடமிருந்தும் மற்ற நடிகர்கள் அனைவரிடமிருந்தும் மிகச் சிறப்பான நடிப்பை வாங்கியதோடு மிக சிறந்த திரைப்பட அனுபவத்தை தந்திருக்கும் இயக்குனர் மீரா கதிரவன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்,” என்று பதிவிட்டுள்ளார்.

படம் வெளிவந்த உடனேயே அவர் படத்தைப் பார்த்துப் பாராட்டியிருந்தால் அது படத்திற்கு பேருதவி செய்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !