உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமாவில் ஹீரோயின் ஆன ஷபானா

சினிமாவில் ஹீரோயின் ஆன ஷபானா

'செம்பருத்தி' தொடரில் பார்வதி கேரக்டரில் நடித்து புகழ்பெற்றர் ஷபானா ஷாஜஹான். 'செம்பருத்தி' மூலம் தமிழுக்கு வந்தார். 'மிஸ்டர் மனைவி' தொடரில் நடித்தார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராகவும் பணியாற்றி உள்ளார். சினிமா வாய்ப்பு தேடி வந்த ஷபானா சமீபத்தில் வெளிவந்த 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

தற்போது 'மேரேஜ் ஸ்டோரி' என்ற படத்தின் மூலம் நாயகி ஆகியிருக்கிறார். இந்த படம் ரீல் பெட்டி புரொடக்சன் தயாரிப்பில் இயக்குனர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. எஸ்.பி.சித்தார்த், மற்றும் தீபிகா வெங்கடாச்சலம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், நிழல்கள் ரவி, அருள்தாஸ், புதுவை பூபாலன் ஆகியோர் நடித்துள்ளனர்.

நட்பு, காதல் மற்றும் காமெடி கலந்து கமர்ஷியல் கதையாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. தமிழ் செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார், தீபன் சக்ரவர்த்தி இசையமைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !