உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மூன்று ஆண்டுகளுக்கு பிறகு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ராம்சரண் தம்பதி

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ராம்சரண் தம்பதி


தெலுங்கு திரையுலகின் இளம் முன்னணி நடிகரான ராம்சரண், சினிமாவில் அறிமுகமான காலகட்டத்திலேயே அப்பல்லோ குழுமத்தின் வாரிசான உபாசனா கொனிடேலாவை திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த அவர்களுக்கு, கடந்த 2023ல் 'க்ளின் காரா' என்கிற பெண் குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் சிவ்ராம் மற்றும் அன்வீரா தேவி என்ற ஆண், பெண் இரட்டைக் குழந்தைகளும் பிறந்தனர்.

அதே சமயம், கடந்த மூன்று ஆண்டுகளாக தங்களது முதல் குழந்தையான க்ளின் காராவின் முகத்தை சமூக வலைதளங்களில் எங்கேயும் வெளியாகாத வண்ணம் கவனமாக பாதுகாத்து வந்த ராம்சரண் தம்பதி, தற்போது முதன்முறையாக கிளின் காராவின் மூன்றாவது பிறந்தநாளன்று அவரது புகைப்படத்தை ரசிகர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !