‛ஓம்' படத்தில் தனுஷ், ஸ்ரீலீலா குத்தாட்டம்
ADDED : 3 hours ago
நடிகர் தனுஷ் , ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் ‛ஓம்' படம் உருவாகி வருகிறது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ஆர்டேக் ஸ்டுடியோஸ் என இரு தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். சாய் அப்யன்கர் இசையமைக்கிறார். மலையாள நடிகர் மம்முட்டி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகிகளாக ஸ்ரீ லீலா, சாய் பல்லவி இணைந்து நடிக்கின்றனர்.
சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ஒரு அதிரடியான தலைப்பு டீசர் வெளியாகி ரவேற்பைப் பெற்றது. இப்போது தனுஷ், ஸ்ரீ லீலா இணைந்து ஒரு குத்து பாடலுக்கு நடனமாடி வரும் காட்சிகளை படமாக்கி வருகின்றனர் என தகவல் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் தனுஷ், ஸ்ரீ லீலா நடனமாடுவது போன்ற சில புகைப்படங்கள் கசிந்துள்ளது.