கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் 'கொட்டுக்காளி' பட இயக்குனர்!
ADDED : 15 hours ago
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவன தயாரிப்பில் ரத்ன குமார் இயக்கத்தில் '29' படத்தில் நடித்த விது நடித்து வருகிறார். இவர் கார்த்திக் சுப்பராஜின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. '29' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் விதுவை கதாநாயகனாக வைத்து மற்றொரு படத்தையும் தயாரிக்கவுள்ளார்.
இந்த படத்தை 'கூழாங்கல், கொட்டுக்காளி' ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ். வினோத்ராஜ் இயக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இவர் மணிகண்டனை வைத்து இயக்கவிருந்த படம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால் இதற்கிடையில் விதுவை வைத்து புதிய படத்தில் தொடங்கும் திட்டத்தில் உள்ளார் என தெரிவிக்கின்றனர்.