உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நடிகர் தர்ஷன் ஜாமீன் மனு

மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நடிகர் தர்ஷன் ஜாமீன் மனு

கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த தர்ஷன், கடந்த 2024ல் தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு, தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பித் தொல்லை கொடுத்த காரணத்தினால், அவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வந்த அவர், இடையில் ஆறு மாதங்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம், இந்த வழக்குடன் தொடர்புடைய தர்ஷன் உள்ளிட்ட 16 பேரையும் மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

தற்போது நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் போதிய முன்னேற்றம் இல்லாத பட்சத்தில், ஒரு வருடம் கழித்து வேண்டுமானால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அனுமதி அளித்திருந்தது. ஆனால், ஒரு வருடம் முடியும் வரை காத்திருக்காமல், இப்போதைய சூழலில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தர்ஷன் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணை மிக மெதுவாக நகர்வதாலும், நீண்ட கால சிறைவாசம் தனது வாழ்வாதாரம் மற்றும் குடும்பத்தைப் பாதிப்பதாலும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !