உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மம்பட்டியான் ஸ்டார்ஸ் : கிரிக்கெட் களத்தில் உருவான வெப் தொடர்

மம்பட்டியான் ஸ்டார்ஸ் : கிரிக்கெட் களத்தில் உருவான வெப் தொடர்

தற்போது விளையாட்டை மையமாக வைத்து பல தமிழ் வெப் தொடர்கள் வெளியாகி உள்ளது. இந்த வரிசையில் அடுத்து ஜி 5 தளத்தில் இன்று முதல் ஒளிபரப்பாகிறது 'மம்பட்டியான் ஸ்டார்ஸ்' என்ற தொடர். இது கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள காமெடி தொடர்.

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ்.குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள 6 அத்தியாயங்கள் கொண்ட இந்த தொடரின் கதையை சவிர் சுதாகர், நவீன் ராஜ்குமார், கலை செல்வன் மற்றும் வினு கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். பி.எம். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் குழுவை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது. கிராமத்து கிரிக்கெட் இளைஞர்கள் சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டி ஒன்றை காண ஒரு பயணம் மேற்கொள்கிறார்கள். அந்த போட்டிக்கான டிக்கெட் போலி என தெரிய வருகிறது. போட்டியை காண அவர்கள் மேற்கொள்ளும் விஷயங்களை காமெடியாக சொல்கிறது இந்த தொடர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !