80 கோடி வசூலைக் கடந்த 'மா இன்ட்டி பங்காரம்'
நந்தினி ரெட்டி இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து ஜுன் 19ல் வெளியான தெலுங்குப் படம் 'மா இன்ட்டி பங்காரம்'. இப்படம் தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியானது.
தயாரிப்பு நிறுவனம் சார்பில் இரண்டு தினங்களுக்கு முன்பு 73 கோடி வசூல் என்று அறிவித்திருந்தார்கள். கடந்த இரண்டு தினங்களில் இப்படம் 7 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தற்போது 80 கோடி வசூலைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். இப்படத்தின் மூலம் இதுவரையில் 25 கோடிக்கும் அதிகமான லாபம் கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் இப்படம் 2 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளது. இந்தியாவில் மட்டும் 55 கோடி வசூலும், வெளிநாடுகளில் 25 கோடி வசூலும் பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்த 2026ம் ஆண்டில் தெலுங்குத் திரையுலகத்தில் சில முன்னணி கதாநாயகர்களின் படங்கள் கொடுக்காத லாபத்தை கதாநாயகியான சமந்தா கொடுத்துள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.