உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எதிர்பார்த்து ஏமாந்து போன தமன்

எதிர்பார்த்து ஏமாந்து போன தமன்

தெலுங்குத் திரையுலகத்தில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடலாக தமன் இசையமைப்பில், வந்த 'அல வைகுந்தபுரம்லோ' படப் பாடலான 'புட்ட பொம்மா' பாடல் இருக்கிறது. அப்படத்தை இயக்கியவர் திரிவிக்ரம் சீனிவாஸ். அப்பாடல் யு டியூப் தளத்தில் 944 மில்லியன் பார்வைகளைக் கடந்து தெலுங்குப் பாடல்களில் முதலிடத்தில் உள்ளது.

அப்படத்திற்கு முன்பு திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கிய 'அரவிந்த சமேத வீரராகவா', அப்படத்திற்குப் பின்பு 'குண்டூர் காரம்' ஆகிய படங்களுக்கும் இசையமைத்தவர் தமன்.

திரிவிக்ரம் சீனிவாஸ் அடுத்து இயக்க உள்ள படத்திற்கும் அவர்தான் இசையமைக்கப் போகிறார் என்று சொன்னார்கள். அந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சியின் எக்ஸ் தளப் பதிவுகளை ரீபோஸ்ட் செய்திருந்தார் தமன்.

ஆனால், பட அறிவிப்பில் அனிருத் இசையமைக்கிறார் என்று அறிவித்தார்கள். அதன்பின் தமன் அத்தயாரிப்பாளரின் பதிவுகளை கண்டுகொள்ளவில்லை.

தான்தான் அந்தப் படத்தின் இசையமைப்பாளராக இருப்போம் என நம்பி, அவற்றை ரீபோஸ்ட் செய்து அறிவிப்பு வந்த பின்பு ஏமாந்து போய் இருக்கிறார் தமன் என டோலிவுட் வட்டாரங்களில் வருத்தப்படுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !