உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹேரா பெரி 3ம் பாகத்தில் இருந்து விலகிய பிரியதர்ஷன்

ஹேரா பெரி 3ம் பாகத்தில் இருந்து விலகிய பிரியதர்ஷன்

மலையாள இயக்குநர்களில் பிரியதர்ஷன் விரைவில் தனது நூறாவது படத்தை இயக்கப் போகிறார்.. மலையாளத்தில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் சீரான இடைவெளியில் படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் உருவான பூத் பங்களா 2 திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே இரண்டு பாகங்களாக வெளியான ஹேரா பெரி படத்தின் மூன்றாம் பாகத்தை அவர் இயக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது. அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி, பரேஷ் ராவல் மூவரும் இணைந்து நடித்த இதன் முதல் பாகம் 2000-ல் வெளியானது. இதை பிரியதர்ஷன் இயக்கியிருந்தார்.

இதன் இரண்டாம் பாகம் 2006-ல் வெளியானது, ஆனால் அதை நீரஜ் வோரா என்பவர் இயக்கியிருந்தார். தற்போது 20 வருடங்கள் கழிந்த நிலையில் இதன் மூன்றாம் பாகத்தை உருவாக்கும் யோசனை பிரியதர்ஷன் மற்றும் கதாநாயகன் அக்ஷய் குமார் இருவருக்குமே ஏற்பட்டது. அதேசமயம் தற்போது இந்த படத்தை இயக்குவதில் இருந்து தான் விலகுவதாகக் கூறியுள்ள பிரியதர்ஷன், இனி இந்த படம் திரைக்கு வராமலே கூட போக வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஹேரா பெரி படத்தின் உரிமம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த நீண்டகால சட்டப் போராட்டம் இப்படத்திற்கு பெரும் தடையாக உள்ளது.. அதனால் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் மற்றும் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளே இதிலிருந்து விலகுவதற்கு காரணம் என்று பிரியதர்ஷன் கூறியுள்ளார். ஆனாலும் படத்தின் தயாரிப்பாளர் பெரோஸ் நாடியத்வாலா, இந்த மூன்றாம் பாகத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அனைத்தும் சரியான திசையில் செல்வதாகவும் கூறியுள்ளார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !