உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்தடுத்து படங்களை வெளியிடும் ரெட் ஜெயன்ட்

அடுத்தடுத்து படங்களை வெளியிடும் ரெட் ஜெயன்ட்

தமிழ் சினிமாவில் கடந்த திமுக ஆட்சியில் அதன் தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினருக்குச் சொந்தமான ரெட் ஜெயன்ட் நிறுவனம் சினிமாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாக குற்றச்சாட்டு இருந்தது. அவர்கள்தான் தொடர்ந்து பல படங்களை வெளியிட்டு வந்தார்கள். சில படங்களை தயாரித்தும் வந்தார்கள்.

ஆட்சி மாறிய பின்பு அது குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்றைய நிகழ்ச்சி ஒன்றில் கூட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இனிமேல் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தால் படங்களை வெளியிட முடியாது என்று பேசினார்.

ஆனால், இன்று வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான் வெளியிட்டுள்ளது. அடுத்த வாரம் ஜூலை 10ம் தேதி வெளியாக உள்ள 'இதயம் முரளி' படத்தையும் அந்நிறுவனம்தான் வெளியிடப் போகிறது. இதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

அடுத்து நெல்சன் இயக்கத்தில் ரஜினி, கமல் இணைந்து நடிக்க உள்ள படத்தை ரெட் ஜெயன்ட் தயாரிக்க உள்ளது. ரஜினி தற்போது நடித்து வரும் 173வது படமான 'தர்மன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு இப்படம் ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

KayD, Mississauga
2026-07-03 18:26:46

vachi seivaanga . adhe samayam konjam yosippanga red giant thaan problem avungalukku .. but pala per vaalvaathaaram iruku adhaiyum yosippanga.. pazhi vaangum gunam vida arivaali yaa yosichu thaan mudivu eduppanga


KayD, Mississauga
2026-07-03 18:22:47

படம் ரிலீஸ் ஆக அனுமதி இருக்கும் .. கருப்பு வெள்ளை ஆகும். ஆனால் ஒரு பயல் பார்க்க மாட்டங்க படம் நல்லா இருந்தால் கூட. so அந்த சிவப்பு அரக்கன் படங்களை ரிலீஸ் பண்ண யோசிப்பாங்க இல்லை வேற பேனர் ல ரிலீஸ் பண்ணுவாங்க