உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராதிகா, லியோ சிவக்குமார் கூட்டணியில் ‛டெலிவரி பாய்' : டீசர் வெளியானது

ராதிகா, லியோ சிவக்குமார் கூட்டணியில் ‛டெலிவரி பாய்' : டீசர் வெளியானது

தாய்கிழவி படத்திற்கு பின் ராதிகா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‛டெலிவரி பாய்'. இதில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் பிரகிடா, காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோ சிவக்குமாரின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக இருந்த நானி, இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நானி.

இந்த படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். அம்மா - மகன் பாசம், வேலைக்காக லஞ்சம் உள்ளிட்ட விஷயங்களை மையமாக வைத்து ஆக் ஷன், திரில்லர் பாணியில் படம் உருவாகி உள்ளது. டீரில் ‛பணம்னு வந்துட்டா யாரா இருந்தாலும் அதன் பின்னாடி ஓடி தான் ஆகணும்' என்ற ராதிகாவின் வசனம் ஹைலைட்டாக யதார்த்த வாழ்வியலை பேசும் விதமாகவும் அமைந்துள்ளது. இந்த மாதம் படம் வெளியாகும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !