'லவ் ஓ லவ்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
ADDED : 1 days ago
நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்திற்கு பிறகு ' லவ் ஓ லவ்' எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக நாக துர்கா என்பவர் நடித்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளிவந்த டீசர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜூலை 10ம் தேதியன்று திரைக்கு வரும் இந்த படத்திற்கு தணிக்கை 'யு/ஏ 13+' சான்றிதழ் கிடைத்துள்ளது என படக்குழு இன்று அறிவித்துள்ளனர்.