உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் அமீர்கான் 3வது திருமணம்

நடிகர் அமீர்கான் 3வது திருமணம்


பாலிவுட்டில் பிரபலமான முன்னணி நடிகர் அமீர்கான், 61. இவருக்கு ஏற்கனவே இரு திருமணங்கள் நடந்து விவாகரத்து ஆன நிலையில் கவுரி ஸ்ப்ராட், (47 வயது) என்ற பெண்ணை காதலித்து வந்தார். சில நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அமீர்கான் - கவுரியின் திருமணம் ஜூலை 5ல் நடப்பதாக அமீர்கானே முன்னரே அறிவித்திருந்தார். அதன்படி, மும்பை பாந்த்ராவில் உள்ள அமீர்கானின் வீட்டில் இன்று மதியம் 12:45 மணியளவில் திருமணம் நடந்தது. இருவரும் தங்களின் திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொண்டனர். இதில் மணமக்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அமீர்கான் 1986ல் ரீனா தத்தா என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு ஜூனைத் கான் என்ற மகனும், ஐரா கான் என்ற மகளும் உள்ளனர். 2002ல் ரீனாவை பிரிந்த அமீர், 2005ல் கிரண் ராவ்வை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார். 16 ஆண்டுகள் கழித்து 2021ல் கிரணையும் விவாகரத்து செய்தார் அமீர். கவரிக்கும் ஏற்கனவே திருமணமாகி, 7 வயதில் மகன் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

shakti, vilupuram
2026-07-06 13:48:07

இந்து பெண்களை லவ்ஜிஹாத் மூலம் திருமணம் செய்து அவர்கள் மாதவிடாய் நின்றதும் அவர்களை கழற்றி விட்டு அடுத்த இந்து பெண்ணை திருமணம் செய்வது முஸ்லீம் பிரபலங்களின் தலையாய கடமை ...