உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : கிரவுட் பண்டிங் முறையில் தயாரான முதல் படம்

பிளாஷ்பேக் : கிரவுட் பண்டிங் முறையில் தயாரான முதல் படம்


நிறைய பேரிடம் சிறிய சிறிய தொகையாக வசூலித்து அதை கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களை கிரவுட் பண்டிங் திரைப்படம் என்று சொல்வார்கள். பிற்காலத்தில் இது போன்ற நிறைய படங்கள் வந்திருந்தாலும் 1960ம் ஆண்டு வெளியான 'பாதை தெரியுது பார்' என்ற படமே முதல் படமாகும்.

மேற்கு வங்கத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து இங்கு பிரபலமான ஒளிப்பதிவாளராக இருந்த நிமாய் கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. விஜயன், எஸ்.வி. சகஸ்ரநாமம், முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். எஸ்.விஜயலட்சுமி நாயகியாக அறிமுகமானார்.

நிமாய் கோஷும், அவரைப் போலவே கம்யூனிஸ்டான இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனும் சேர்ந்து திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள், மாணவர்கள் என பலரிடம் 500 முதல் 5000 ரூபாய் வசூலித்து குமரி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இந்த படத்தை எடுத்தனர்.

மில் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையேயான பிரச்னைகளை பேசிய இந்த படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றது. என்றாலும் படம் பிரசார பாணியில் அமைந்திருந்ததால் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !