உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூப்பர் ஹீரோ ஆனார் அர்ஜுன் தாஸ்

சூப்பர் ஹீரோ ஆனார் அர்ஜுன் தாஸ்


வில்லனாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார் அர்ஜுன் தாஸ். அவர் நடித்த 'கான்சிட்டி' படம் சமீபத்தில் வெளிவந்தது. தற்போது அவர் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் ஜீவா (முகமூடி), சிவகார்த்திகேயன் (ஹீரோ) ஆகியோருக்கு பிறகு சூப்பர் ஹீரோவாக நடிப்பவர் அர்ஜுன் தாஸ்.

இந்த படத்தை சோல்ஜர்ஸ் பிலிம் பேக்டரில் சார்பில் கே.எஸ்.சினிஷ், ரெடாக்டட் ஸ்டுடியோஸ் சார்பில் ஷான்ஜன் ஜி தயாரிக்கிறார்கள்.

தேஜு அஸ்வினி, அர்ஜுன் தாஸ் ஜோடியாக நடிக்கிறார், சாண்டி மாஸ்டர் வில்லனாக நடிக்கிறார். இந்தப் படம் மலையாளத்தில் வெளிவந்த 'மின்னல் முரளி' படத்தின் சாயலில் உருவாவதாக கூறப்படுகிறது.

படம் குறித்து அறிமுக இயக்குனர் விக்னேஷ் வேணுகோபால் கூறியது: ஹீரோவுக்கு ஒரு தம்பி இருக்கிறார். வில்லனுக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். ஹீரோவின் பலம், பலவீனம் இரண்டும் அவனது தம்பிதான். அதேபோல்தான் அண்ணன் மீது உயிராக இருக்கிறான் வில்லன்.

இந்த எமோஷன் ரிலேஷன்ஷிப்பில் ஏற்படும் பிரச்னையால் ஒரு கட்டத்தில் ஹீரோவும் வில்லனும் மோதுவதுதான் கதை. ஹீரோவாக அர்ஜுன்தாஸ், வில்லனாக சாண்டி மாஸ்டர் நடிக்கிறார். கதைப்படி, அர்ஜுன் தாஸ் ஒரு மெக்கானிக். தம்பிக்காக அவர் சூப்பர் ஹீரோவாக மாறுகிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. செப்டம்பரில் படம் வெளியாகும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !