அகில் படத்திற்கு வாழ்த்து சொன்ன சமந்தா
நடிகை சமந்தா, நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாகசைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பிறகு நாகசைதன்யா மட்டுமல்ல, நாகார்ஜுனாவின் பிறந்தநாள் மற்றும் அவர்களது பட வெளியீடு குறித்து எதற்குமே அவர் வாழ்த்து சொன்னதில்லை. அதேசமயம் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் மீது தனிப் பாசம் கொண்டிருக்கிறார் சமந்தா. அதனால் அகிலின் பிறந்தநாள் மற்றும் அவரது பட வெளியீட்டுக்குத் தவறாமல் வாழ்த்து சொல்லி வருகிறார்.
சமீபத்தில் அகில் நடிப்பில் வெளியாகியுள்ள 'லெனின்' படத்திற்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள சமந்தா, நிச்சயமாக ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அதிர்வு தெரிகிறது என்று சோசியல் மீடியா பக்கத்தில் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக அகில் நடித்த 'ஏஜென்ட்' திரைப்படம் வெளியான சமயத்திலும் சமந்தா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.