'ரன்' 2ம் பாகம் உருவாகுமா? இயக்குனர் லிங்குசாமி பதில்!
ADDED : 1 hours ago
'ரன்' திரைப்படத்தின் ரீ-ரிலீஸை முன்னிட்டு இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை அளித்து வருகிறார்.
அவற்றில் ஒன்றில், ரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு லிங்குசாமி கூறியதாவது, ரன் படம் ரீ-ரிலீஸ் மட்டும் தான் ஆகும். ரன் 2ம் பாகம் எல்லாம் உருவாகாது. அந்த தவறை இனி என் வாழ்க்கையில் செய்ய மாட்டேன். ஒரு படத்தின் மேஜிக் ஒரு முறைதான் வேலை செய்யும். அதை நாமே கெடுத்துவிட கூடாது. சண்டக்கோழி படத்திற்கு இரண்டாம் பாகம் உருவாக்கி அந்த தவறை ஒருமுறை செய்துவிட்டேன். அதே தவறை மீண்டும் செய்ய விரும்பவில்லை. ரன், சண்டக்கோழி போன்ற படங்கள் கிளாசிக் அந்த படங்களை அப்படியே விட்டுவிட வேண்டும். எனத் தெரிவித்துள்ளார்.