உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனது புகைப்படங்களை மார்பிங் செய்தவர்கள் மீது 'ஜெயிலர் 2' நடிகை சைபர் கிரைமில் புகார்

தனது புகைப்படங்களை மார்பிங் செய்தவர்கள் மீது 'ஜெயிலர் 2' நடிகை சைபர் கிரைமில் புகார்


மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான 'அங்கமாலி டைரிஸ்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அன்னா ரேஷ்மா ராஜன். அதற்கு அடுத்து வெளியான மோகன்லாலின் 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம் பெற்ற 'ஜிமிக்கி கம்மல்' பாடலில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். தற்போது தமிழில் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் பலமுறை உருவ கேலிக்கு ஆளான இவர், சமீபத்தில் தனது புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு இணையத்தில் வெளியானது குறித்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்தச் செயலை அசிங்கமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கடுமையாகக் கண்டித்துள்ள அன்னா ராஜன், இது தனது தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு தீவிரமான தாக்குதல் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல இன்ஸ்டாகிராமில் இவற்றை பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி கேரள காவல்துறை மற்றும் சைபர் கிரைம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளார். மேலும் இது போன்ற மலிவான மார்பிங் படங்களை தயவு செய்து யாரும் பகிரவோ ஆதரிக்கவோ வேண்டாம் என்றும் ரசிகர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !