வாசகர்கள் கருத்துகள் (1)
1984ல் வெளிவந்த Kamal heroக நடித்த raaj thilak movie ல் ராஜ் கிரண் நடித்திருப்பார்... handsome இருப்பார்.. 10 வருடங்களுக்கு முன் usa ல் courier delivery man க வேலை செய்வதாக செய்தி தாளில் படித்தது.. ஞாபகம்
பாலிவுட்டில் 70களின் மத்தியில் அறிமுகமாகி குறிப்பிடத்தக்க நடிகராக அறியப்பட்டவர் ராஜ் கிரண். 2000க்கு பிறகு படங்களில் நடிக்கவில்லை என்பதுடன் அதன்பிறகு எங்கே போனார், என்ன ஆனார் என்று இதுவரை தெரியவில்லை. இவருடன் நட்பாக பழகி வந்தவர் நடிகை சோமி அலி. இவர்தான் சல்மான்கான் உடன் 90களில் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இந்த 16 வருடங்களாக நடிகர் ராஜ்கிரண் எங்கே இருக்கிறார் என்று தன்னால் முடிந்த வரை அவர் தேடி வருகிறார். சில வெளிநாடுகளுக்கும் சென்று தேடியுள்ளார். அதுமட்டுமல்ல, மறைந்த நடிகர் ரிஷி கபூரிடம் ஒரு படப்பிடிப்பில் பேசிக் கொண்டிருக்கும் போது ராஜ்கிரணை எப்படியாவது கண்டுபிடிப்பேன் என வாக்கு கொடுத்திருந்தாராம் சோமி அலி. ரிஷி கபூர் மறைந்த பிறகும் கூட தொடர்ந்து ராஜ்கிரணை தேடும் முயற்சியில் சோமி அலி ஈடுபட்டுள்ளார். தற்போது அவர் எங்கே இருக்கிறார் என சரியான தகவல் தருபவர்களுக்கு ஐயாயிரம் டாலர் சன்மானம் தருவதாகவும் அறிவித்துள்ளார் சோமி அலி.