உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இசை அமைப்பாளர் மீது பாடகி ஸ்வாகதா மீண்டும் தாக்கு

இசை அமைப்பாளர் மீது பாடகி ஸ்வாகதா மீண்டும் தாக்கு

சினிமா பின்னணி பாடகி ஸ்வாகதா சில மாதங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர் ஒருவர் மீது பெயர் குறிப்பிடாமல் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். அவர் தன்னை ரிக்கார்டிங் அறையில் வைத்து பாலியல் கொடுமை செய்ததாகவும், அவர் இந்தியாவின் எப்ஸ்டீன் (சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்திய அமெரிக்கர்) என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அவரது பெயரை கூறும்படி பலர் கேட்டபோது மானநஷ்ட வழக்கிற்கு ஆகும் செலவை யாராவது ஏற்றுக்கொள்ள முன்வந்தால் அதனை வெளியிடுவதாக கூறியிருந்தார். தனது குற்றச்சாட்டில் ஜி.வி.பிரகாஷ், ஜிப்ரான், அனிருத் ஆகியோர் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

ஸ்வாகதா ஒரு பிரபல இசை அமைப்பாளரின் ஸ்டூடியோவில் சில ஆண்டுகள் பணியாற்றினார், அவருடைய உதவியாளர் போல இருந்தார். அவரது இசை அமைப்பில்தான் அதிக பாடல்கள் பாடினார். அதனால் அவர் குற்றம் சாட்டும் இசை அமைப்பாளர் இவர்தான் என்று நெட்டிசனகள கணித்து எழுதி வந்தார்கள்.

சமீபகாலமாக அமைதியாக இருந்த ஸ்வாகதா தற்போது மீண்டும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் இது குறித்து எழுதியிருப்பதாவது: நிறைய சொல்லணும்னு தோணுது. ஆனால் ஒரு பிரியாணிக்கு உண்மையும், மீடியாவும் விலைபோகும்ணு நினைச்சான் பாருங்கு இந்த ஆளு சிரிப்பு சிரிப்பா வருது.

நீ பண்ணு இன்னும் என்னெல்லாம் பண்றேன்னு பார்குகிறேன். உன்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டையும் கவனிக்கிறேன். இது நான் எதிர்பார்த்ததுதான். அடுத்த என்ன செய்யப்போறேன்னு எனக்குத் தெரியும். பார்த்துறலாம் மிஸ்டர்.. பிரதர் எனது பழிவாங்கலுக்கு தயாரா இரு. என்று எழுதியிருக்கிறார். இதை விட கடுமையாக மேலும் சில ஸ்டோரிகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

PV
2026-07-31 23:19:43

MadamIf possible name the MD or keep your mouth shut. Not every time you talk anonymous. It gives the impression that you want to a sensation.