உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த படத்தின் ரீமேக்கில் சிறிய கேரக்டரில் நடித்த நடிகர்

பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த படத்தின் ரீமேக்கில் சிறிய கேரக்டரில் நடித்த நடிகர்

சினிமாவின் தொடக்க காலத்தில் சூப்பர் ஸ்டார்களாக இருந்தவர்கள் தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா மற்றும் டி.ஆர்.மகாலிங்கம். இவர்களில் முதல் இருவரும் கடைசி வரை ஹீரோக்களாகவே நடித்தார்கள். ஆனால் டி.ஆர்.மகாலிங்கம் சொந்த படம் எடுத்து பொருளாதாரத்தை இழந்து பின்னர் நாடகத்திற்கே திரும்பிச் சென்று மீண்டும் ரீ என்ட்ரியில் குணசித்ர வேடங்களில் நடித்தவர்.

1945ம் ஆண்டு ஏவி மெய்யப்ப செட்டியார் தயாரித்து ஏ.டி.கிருஷ்ணசாமியுடன் இணைந்து இயக்கிய படம் 'ஸ்ரீவள்ளி'. கடவுள் முருகனுக்கும், குறவர்குல பெண் வள்ளிக்குமான காதலை சொன்ன படம். இதில் டி.ஆர்.மகாலிங்கம் முருகனாக நடித்தார், குமாரி ருக்மணி வள்ளியாக நடித்தார். இதே படம் 1961ம் ஆண்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஏவிஎம் நிறுவனத்திடம் உரிமம் பெற்று நரசுஸ் ஸ்டூடியோ சார்பில் வெங்கடேசன், வெங்கட்ராமன் தயாரித்தனர். டிஆர் ராமண்ணா இயக்கினார்.

இதில் சிவாஜி முருகனாகவும், பத்மினி வள்ளியாகவும் நடித்தனர். மூலப்படத்தில் முருகனாக அதாவது கதை நாயகனாக நடித்த டி.ஆர்.மகாலிங்கம், இந்த படத்தில் முருகன் காதலுக்கு உதவும் நாரதராக நடித்தார். இரண்டு படங்களுமே வெற்றி பெற்று வசூலை குவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !